நாங்க எல்லாம் ஜலபுல ஜில்ஸ்.., பிரியா பவானிசங்கர் காலேஜில் அந்த மாதிரியாம்..,

Published on: May 17, 2022
---Advertisement---

டெலிவிஷனில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி, அதற்கடுத்து, ஒரு பிரபல தொலைக்காட்சியில் ஓர் சீரியல் நடிகையாக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை பிரியா பவானிசங்கர். அதன் பிறகு சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்து இங்கும் தனது சிறப்பான நடிப்பின் மூலம் நல்ல நடிகையாக வலம் வருகிறார்.

இவரது நடிப்பு, கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மேயாத மான், கசடதபற போன்ற படங்களில் மிகவும் நன்றாகவே இருக்கும். அதன் பிறகு, தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம், எஸ்.ஜே.சூர்யா உடன்  பொம்மை ஆகிய படங்கள் ரிலீஸ்க்கு காத்திருக்கின்றன.

ப்ரியா பவானிசங்கரும், அஷோக் செல்வனும் நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ஹாஸ்டல் . இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக இவர்கள் கொடுத்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, பிரியா பவானிசங்கர் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது அங்குள்ள நண்பர்கள் ஒன்று சேர்ந்து ஒரு குரூப் இணையத்தில் உருவாக்கி உள்ளனர்.

இதையும் படியுங்களேன் – சூர்யா பேருக்கு இப்படி ஒரு களங்கமா.?! இதெல்லாம் நியமில்லங்க பேரம் பேசாதீங்க..,

அதற்கு பெயர் என்னவென்றால், ஜலபுல ஜில்ஸ். இந்த பெயரை கேட்டவுடன், அசோக் செல்வன் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் சிரித்து விட்டனர். பின்னர் பிரியா இதற்கு பின்னால் நடந்த விஷயத்தையும் சொன்னார். முதலில் பேஸ்புக்கில் ஓபன் குரூப்பாக ஆரம்பித்து விட்டனராம்.

அதன் பிறகு தான் கண்டுபிடித்து வாட்சாப் குரூப் ஆரம்பித்தனராம். தற்போது இந்த பெயர் வெளியில் தெரிந்தவுடன் ரசிகர்கள் பலர் இணையத்தில் தேட ஆரம்பித்து விட்டனர்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment