சூப்பர் ஸ்டார் மிஸ் பண்ண சூப்பர் ஹிட் படம்…இப்ப வரைக்கும் மனம் குமுறும் இயக்குனர்….!

Published on: May 17, 2022
pothan_main_cine
---Advertisement---

நடிகராக இயக்குனராக தன் பன்முகத் திறமைகளால் தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர் நடிகர் பிரதாப் போத்தன். ‘என் இனிய பொன் நிலாவே’ என்ற பாடலை யாராலும் மறக்க முடியாது. கித்தார் வாசித்துக் கொண்டு இருட்டில் அந்த அமைதியான பாடலை இவர் பாடும் காட்சி அனைவரையும் ஏதோ ஒரு பசுமையான உலகத்திற்கே கொண்டு போகும்

pothan1_cine

அப்படி இருந்த இவர் நிறைய வெற்றிப்படங்களை இயக்கி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். கமல் நடித்த வெற்றிவிழா படம் இவர் இயக்கத்தில் வெளிவந்தது. ப்ளாக் பஸ்டர் திரைப்படமாக வெற்றியடைந்தது. அந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களுல் சூப்பர் டூப்பர் ஹிட்.அதை அடுத்து பிரபு நடிப்பில் வெளிவந்த மைடியர் மார்த்தாண்டன் காமெடி படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

pothan2_cine

1994 ஆம் ஆண்டு நெப்போலியன் நடிப்பில் வெளியான ‘ சீவலப்பேரி’ படம் இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான். நெப்போலியனுக்கு ஜோடியாக சரண்யா பொன்வன்னன் நடித்திருந்தார். இந்த படம் க்ரைம் கலந்த ஒரு ஆக்‌ஷன் படமாக அமைந்தது. இதுவும் ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

pothan3_cine

இந்த படம் நடிகர் நெப்போலியனுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நெப்போலியனுக்கு படவாய்ப்புகள் வர தொடங்கியது. இந்த நிலையில் பிரதாப் போத்தன் ஒரு பேட்டியில் கூறும் போது “ நான் இந்த படத்தை மம்மூட்டிக்காக தான் எழுதினேன், அவர் அப்பொழுது இருந்த பிஸியால் நடிக்க முடியவில்லை , அதன் பிறகு தான் நெப்போலியன் கமிட் ஆனார்” என்று கூறினார். ஆனால் மம்மூட்டி நடிக்காதது இன்னும் எனக்கு ஒரு வலியை தருகிறது நெப்போலியனும் நன்றாக நடித்தார் ஆனாலும் ஒரு சின்ன மனவருத்தத்தை தருகிறது என்று கூறினார்.

Leave a Comment