களைகட்டிய ஆதி – நிக்கி கல்ராணி மெஹந்தி ஃபங்க்ஷன்!.. ஆலுமா டோலுமா பாட்டுக்கு ரெண்டு பேரும் இன்னாம்மா டான்ஸ் ஆடுறாங்க!

Published on: May 18, 2022
---Advertisement---

ஈரம், அரவாண், மரகநாணயம் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஆதி. டார்லிங், சார்லி சாப்ளின் 2, ஹரஹர மகாதேவகி உள்ளிட்ட படங்களில் கவர்ச்சி தூக்கலாக நடித்து அசத்தியவர் நிக்கி கல்ராணி இருவரும் இணைந்து யாகாவராயினும் நாகாக்க, மரகதநாணயம் உள்ளிட்ட படங்களில் நடித்த போது காதல் வலையில் விழுந்தனர்.

கடந்த 7 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்து வந்த இருவரும் கடந்த மார்ச் 23ம் தேதி நிச்சயம் செய்து கொண்டு மே மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், மெஹந்தி, சங்கீத், ஹல்தி என திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சிகள் சென்னையில் உள்ள நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் கோலாகலமாக தொடங்கி உள்ளது.

நடிகர்கள் ஆர்யா, சாயிஷா, நானி, சந்தீப் கிஷன், மெட்ரோ சிரிஷ் உள்ளிட்ட பலர் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தம்பதியினரை வாழ்த்தி வருகின்றனர்.

நானி மற்றும் சந்தீப் கிஷன் இருவரும் வந்திருந்தபோது நடிகர் அஜித்தின் ஆலுமா டோலுமா பாடல் போடப்பட்டது. அந்த நடிகர்களுடன் மணமக்களான நிக்கி கல்ராணியும், ஆதி பினிசெட்டியும் போட்ட குத்து டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், நலங்கு நிகழ்ச்சியில் இருவரையும் மஞ்சளில் குளுப்பாட்டி எடுத்த புகைப்படங்களும் இணையத்தில் செம வைரலாகி உள்ளது.

ஆதி மற்றும் நிக்கி கல்ராணியின் திருமணத்திற்காக நடிகர் அஜித்தும் ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்து இறங்கி உள்ளார். அவரது புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் கசிந்த நிலையில், அஜித் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்துடன் அந்த புகைப்படங்களையும் ஷேர் செய்து வருகின்றனர்.

crdesk

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment