நிலமை இப்படியா தலைகீழா மாறனும்..! காமெடி நடிகருக்காக காத்திருக்கும் கும்கி நாயகி..!

Published on: May 18, 2022
lakshmi menon
---Advertisement---

கும்கி படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் அந்த படத்தை தொடர்ந்து சுந்தரபாண்டியன், குட்டிப்புலி, பாண்டியநாடு என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து குறுகிய காலத்தில் டாப் நடிகையாக உயர்ந்தார்.

ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பாவம் எவ்வளவு வேகமாக முன்னேறினாரோ அதைவிட வேகமாக சறுக்கி அதளபாதாளத்திற்கு சென்றுவிட்டார். திடீரென சுத்தமாக மார்க்கெட் இல்லாத நிலையில் படங்களில் நடிப்பதையே லட்சுமி மேனன் நிறுத்தி விட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

lakshmi menon

இவர் நடிப்பில் இறுதியாக வெளியான புலிக்குத்தி பாண்டி படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் தான் சில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது லட்சுமி மேனன் புதிய படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், காமெடி நடிகர் ஒருவர் மூலம் படத்திற்கு சிக்கல் வந்துள்ளதாம்.

டாப் நடிகர்களிடம் கூட கால்ஷீட் வாங்கி விடலாம் ஆனால் அந்த காமெடி நடிகரிடம் கால்ஷீட் வாங்க முடியாது என்று கூறும் அளவிற்கு கைவசம் ஏராளமான படங்களை வைத்து கொண்டு பிசியாக நடித்து வரும் யோகி பாபுவால் தான் தற்போது லட்சுமி மேனனின் ரீ என்ட்ரி படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

lakshmi menon

ஆமாங்க லட்சுமி மேனன் ஷூட்டிங்கிற்கு வந்துவிட்ட நிலையில் யோகி பாபு வராமல் தவிர்த்து வருகிறாராம். காரணம் கேட்டால் உங்கள் படத்திற்கு ஏற்கனவே இரண்டு, மூன்று தடவை கால்ஷீட் கொடுத்தாச்சு. ஆனால் அதை நீங்கள் சரியாக பயன்படுத்தவில்லை. தற்போது யோகி பாபு பிசியாக நடித்து வரும் நிலையில் அவரை தொல்லை செய்வது எந்த வகையில் நியாயம் என யோகி பாபு தரப்பில் கேள்வி எழுப்புகிறார்களாம்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment