
Cinema News
என்னால அதை மட்டும் ஓப்பன் பண்ண முடியாது!.. என்னங்கடா வலிமை படத்துல நடித்த நடிகை பொசுக்குன்னு இப்படி சொல்லிட்டாரு!
வலிமை படத்தில் நடிகர் அஜித்தின் இன்டெலிஜன்ஸ் டீமில் பியர்லி மானி மற்றும் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி இருவரும் நடித்திருப்பார்கள். அதில், சைத்ரா ரெட்டியின் உயிரை பணயம் வைத்து வில்லனை நடிகர் அஜித் விரட்டிப் பிடிக்க அவரை பாலம் ஒன்றில் நிற்க வைத்திருப்பார். அந்த காட்சிகள் வலிமை படத்தில் ரொம்பவே பாராட்டுக்களை அள்ளின.
சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டி நடிகர் அஜித்குமாரின் தீவிர ரசிகை என அவரே ஏகப்பட்ட போஸ்ட்டுகளை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் போட்டுள்ளார்.
வலிமை படத்தில் அவ்வளவு ஸ்ட்ராங்கான கேர்ளாக நடித்த சைத்ரா ரெட்டியால் நிஜ வாழ்க்கையில் ஒரு கோலி சோடாவை சிங்கிள் ஷாட்டில் ஓப்பன் பண்ண முடியாது என பல முறை ஒரு கோலி சோடாவை உடைக்க முயற்சி செய்யும் செம ஃபன்னியான வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் என்னங்க சொல்றீங்க உங்களுக்கு அதை ஓப்பன் பண்றதில்லை அப்படியொரு கஷ்டமா என பரிதாபப்படுவது போல பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
View this post on Instagram
கன்னட டிவி நடிகையான சைத்ரா ரெட்டி கடந்த 2019ம் ஆண்டு ரக்கட் எனும் படத்தில் நடித்திருந்தார். தமிழில் யாரடி நீ மோகினி சீரியல் மூலம் அறிமுகமான இவரை இயக்குநர் எச். வினோத் அஜித்தின் வலிமை படத்தில் நடிக்க வைத்துள்ளார். ஏகே 61 படத்திலும் சைத்ரா ரெட்டி நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் உள்ளன.

Chaitra Reddy
அழகு சிலையான சைத்ரா ரெட்டி இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் நடன வீடியோக்களுக்கு லட்சக் கணக்கில் லைக்குகள் குவிந்து வருகின்றன.