முடியாது என கதறியும் பாவனியை விடாமல் அமீர் போட்ட ஆட்டம்!.. ரொம்ப தான் ஓவரா போறீங்க என விளாசும் நெட்டிசன்ஸ்!

Published on: May 19, 2022
---Advertisement---

பாவனியின் சேலையை கடித்த படி சமீபத்தில் போஸ் கொடுத்து நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்ட பிக் பாஸ் பிரபலம் அமீர், தற்போது அதை விட ஒரு படி மேலே சென்று பாவனியின் காலை விரித்து கொடுமைப்படுத்தும் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ல் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனியை வைல்டு கார்டு என்ட்ரியாக வந்து உஷார் பண்ணி விட்டார் அமீர் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இருவரும் இணைந்து பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வில் பங்கேற்று நடனமாடி வருகின்றனர்.

pavani

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் அமீர் ஆடிய ஆட்டத்தை பார்த்து பாராட்டி இருந்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அவருடன் இணைந்து பாவனி பாப்பா எப்படி ஆடப் போறாங்கன்னு எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அவரை எப்படியாவது ஆட வைத்து விட வேண்டும் என கடுமையான பயிற்சிகளை கொடுத்து வருகிறார் அமீர்.

இந்நிலையில், ஜோடியை எப்படி மாற்றுவது? அதற்கான புரொசீஜர் ஏதாவது இருக்கா என வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தின் சாம்பு மகன் போல பாவனி கேப்ஷன் போட்டு வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவில் அமீர் பண்ணும் சேட்டைகளை பார்த்து ஏகப்பட்ட நெட்டிசன்கள் கடுப்பாகி கண்டபடி இருவரையும் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

பாவனியின் கால்கள் நன்றாக ஸ்ட்ரெட்ச் ஆகவேண்டும் என்பதற்காக அதனை விரித்து அமீர் செய்யும் வீடியோவுக்கு படு ஆபாசமான கமெண்ட்டுகளும் குவிந்து வருகிறது. இதையெல்லாம் வீடியோவாக எடுத்து போட்டு ஏன் அசிங்கப்படுறீங்க பாவனி என அவரது ஆர்மியினரே அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pavni (@pavani9_reddy)

crdesk

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment