Cinema News
தப்பு பண்ணிட்டேன்..இல்லைன்னா 4 வீடு வாங்கியிருப்பேன்…! விமர்சனத்தால் வீட்டை இழந்த பார்த்திபன்…
ஆளுமையான தன் கருத்துக்களால் மற்றவரிடம் சற்று வேறுபட்டு இருக்கும் எண்ணங்களை தன் கவிதைகள் மூலம் வெளிக்கொணரும் ஆளுமை படைத்த ஒருவர் நடிகர் பார்த்திபன். நடிகராக வேண்டும் என்ற எண்ணத்தில் சினிமாவிற்குள் வந்து இணை இயக்குனாராக மாறி தன் வித்தியாசமான எண்ணங்களால் கவரப்பட்டு பின் நடிகர் ஆனவர்.
ஏகப்பட்ட படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிருக்கிறார். இவர் நடிகரும் இயக்குனருமான பாக்கியராஜின் சிஷ்யன் ஆவார். அவரிடம் சேர்ந்து இணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் இயக்கிய படங்கள் எல்லாம் விமர்சன ரீதியாக வெற்றிப்பட்ட படங்களாகும். முதன் முதலில் புதிய பாதை என்ற படத்தை இயக்கினார்.
வெற்றிக் கொடிகட்டு, நீ வருவாய் என, ஆயிரத்தில் ஒருவன், அழகி, ஒத்த செருப்பு போன்ற படங்கள் எல்லாம் இவர் லீடு ரோலில் நடித்து வெற்றியடைந்த படங்களாகும். புதிய பாதை என்ற படத்தில் ஒரு முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்று தமிழில் சிறந்த படத்திற்காக தேசிய விருதை பெற்றது.
பின் இவர் இயக்கி நடித்த உள்ளே வெளியே படம் தான் எடுக்கப்பட்ட படங்களிலே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்திய படம் எனக் கூறினார். ஆனால் அந்த படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் ஆனது கூடவே எதிர்மறையான விமர்சனங்களை கொண்டே வெற்றி பெற்றது. ஏனெனில் அத்தனை ஆபாசங்களுடன் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். எனினும் மோசமான விமர்சனங்களை பெற்ற படமாகும் என கூறினார். அந்த விமர்சனங்களை எல்லாம் கேட்டுதான் என்னை நானே திருத்திக் கொண்டேன். இல்லையெனில் அந்த மாதிரி ஒரு 4 படம் எடுத்திருந்தால் இந்நேரம் திருவான்மியூரில் 4 வீடு வாங்கியிருப்பேன் என்று கூறினார். இப்படி பட்ட பார்த்திபன் இனி இந்த மாதிரி படங்கள் எல்லாம் எடுக்கக் கூடாது என உள்ளே வெளியே படம் எனக்கு உணர்த்தியது என்று கூறினார்.