
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான இளம் பெண்களை சமூக வலைதளம் மூலம் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் தமிழகத்தையே அதிரச் செய்தது. இந்த சம்பவத்தில் பெரும் அரசியல் புள்ளிகளின் வாரிசுகள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் இயக்குனர் செல்வா இது குறித்த திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த படத்தில் அரவிந்த்சாமி ஐபிஎஸ் அதிகாரியாக நடித்து, பொள்ளாச்சி குற்றவாளிகளை எப்படி டீல் செய்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று கூறப்படுகிறது.
வணங்காமுடி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வைத்து உருவாக்கப்பட்டு இருப்பதால் பல அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளை சம்பாதிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதோடு, ரிலீசுக்கு முன்னர் சர்ச்சைக்கு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது
அரவிந்த்சாமி ஜோடியாக சிம்ரன் நடிக்கும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் ரித்விகா சிங், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்து வருகின்றனர். அரவிந்தசாமிக்கு இந்த படத்தில் 4 கெட்டப் உள்ளதாகவும் இந்த படத்தின் கேரக்டருக்கு அவர் கச்சிதமாக பொருந்தி உள்ளதாகவும் இயக்குனர் செல்வா கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தமிழ் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து செய்திகள் வெளிவந்துள்ளது