புலியிடம் தனியாக மாட்டிய நபர் தப்பித்தது எப்படி? – வைரல் வீடியோ !

Published on: January 29, 2020
---Advertisement---

99d5dcaa1d27757f6b2ba5e3b7a3cce8-4

மகாராஷ்டிரா மாநிலத்தில் புலியிடம் தனியாக சிக்கிய மனிதன் இறந்தவர் போல் நடித்து தனது உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் பந்தாரா மாவட்டத்தில் வனத்தில் இருந்து வெளியே வந்த புலி ஒன்று கிராமம் ஒன்றில் உலாவ ஆரம்பித்தது. இதனால் பீதியடைந்த மக்கள் கூட்டமாக புலியை விரட்டினர். அப்போது புலியிடம் தனியாக ஒரு மனிதர் சிக்கிக்கொண்டார்.

அவரிடம் புலி நெருங்கியதும் அவர் புத்தி சாலித்தனமாக இறந்தவர் போல அப்படியே படுத்துக் கிடந்தார். அதனால் அவரை சில நிமிடம் சுற்றி வந்த புலி மக்களின் சத்தத்தால் பயந்து ஓட ஆரம்பித்தது. அதனையடுத்து மக்கள் அந்த புலியை விரட்டியடித்தனர்.

இந்த சம்பவத்தை அங்குள்ள மக்கள் வீடியோவாக எடுக்க அதை ஒரு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

Leave a Comment