இந்த வயசுல இப்டி தான் தோணும்., இது ரஜினி சொன்னது.! கே.எஸ்.ரவிக்குமார் பளார் பேச்சு.!

Published on: May 26, 2022
---Advertisement---

சமீபத்தில் இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் ட்ரைலர் என்றால் அது மாலை நேர மல்லிப்பூ. இந்த படத்தின் ட்ரைலர் வழக்கமாக ஏதேனும் ஒரு இயக்குனர் விலைமாதுகளை பற்றி படமாக்கியுள்ளார் என்றால் சாதாரணமாக கடந்து சென்று விடுவர்.

ஆனால், இந்த விலைமாதுக்களை பற்றி படம் எடுத்தது ஓர் 21 வயது இளைஞர். அதனால் தான் திரையுலகமே ஆச்சர்யமடைந்தது. அந்த ட்ரைலரும் ரசிகர்களை பிரமிக்க வைத்தது. உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவானது என கூறுகையில், மேலும் திகைப்பூட்டியது.

இந்த படம் த்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், வசந்த் என பெரிய பெரிய இயக்குனர்கள் எல்லாம் வந்திருந்தனர். அதில் பலரும் இப்பட இயக்குனர் சஞ்சய் நாராயணன் எனும் 21 வயது இளைஞரை வெகுவாக பாராட்டினர்.

இதையும் படியுங்களேன் – அன்று விட்டதை இன்று பிடிக்க பக்கா பிளான்.! உலகநாயகனின் பலே திட்டம் அம்பலம் .!

அப்போது இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்  பேசுகையில், ‘ முதலில் இந்த விழாவிற்கு வராமல் தவிர்த்திடலாம் என நினைத்திருந்தேன். பிறகு அம்மா தயாரிப்பாளர், பையன் இயக்குனர், படத்தின் பெயர் மாலை நேர மல்லிப்பூ , விலை மாதுக்கள் பற்றிய படம் என்பதால் வந்துவிட்டேன்.

இந்த வயசுல இப்படி தான் தோணும். இந்த வயசுல ரத்தம் சூடா தான் இருக்கும்.  அது அப்படி தான் இருக்கனும். ரஜினி சார் கூட சொல்வார், ரத்தம் எப்பவும் சூடா இருக்கனும். அப்போது தான் சுறுசுறுப்பாக இருக்கும் என கூறுவார். தயாரிப்பளார் அம்மா விஜயலட்சுமிக்கு  வாழ்த்துக்கள் உங்கள் பணம் கண்டிப்பாக வந்துவிடும். ‘ என்று இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனக்கு மனதில் பட்டதை பேசியிருந்தார்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment