">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
சைக்கோவை மன்னித்தால் என்ன தவறு? – பொங்கியெழுந்த மிஷ்கின்
சைக்கோ திரைப்படம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு அப்படத்தின் இயக்குனர் மிஷ்கின் தொடர்ந்து பதிலளித்து வருகிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி நடித்த ‘சைக்கோ’ திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ஒரு பெண்ணால் பாதிக்கப்பட்ட சைக்கோ கொலைகாரன் பெண்களை தொடர்ச்சியாக கடத்திச்சென்று கொடூரமாக செய்யும் காட்சிகள் காட்டப்பட்டுள்ளது
இந்நிலையில், இப்படம் தொடர்பாக பல கேள்விகளை விமர்சகர்கள் மற்றும் நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.குறிப்பாக 24 கொலைகளை செய்யும் சைக்கோவை படத்தின் கதாநாயகி எப்படி குழந்தையாக பார்க்கிறார்? அவனை எப்படி மன்னிக்கலாம்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கு பதில் கூறியுள்ள மிஷ்கின் ‘மதக்கோட்பாடுகளும், கட்டுப்பாடுகளுமே அவனை சைக்கோவாக மாற்றியதாக கூறியிருக்கிறேன். அவனிடம் அதிதிராவ் அடைபட்டிருக்கும் ஒரு வாரத்தில் அவனின் விரல் கூட அவள் மீது படவில்லை. அவன் ஏன் அப்படி ஆனான் என்பதை அதிதி ராவ் உணர்கிறார். அவளது பார்வையில் அவன் குழந்தையாக தெரிகிறான். இது எப்படி தவறாகும்? படத்தை முழுமையாக புரிந்து கொண்டு விமர்சனம் செய்தால் நன்றாக இருக்கும். இது மாதிரியான படங்கள் சிவப்பு ரோஜாக்கள் காலத்திலிருந்தே வந்து கொண்டிருக்கிறது. நான் அதை என் பாணியில் கொடுத்துள்ளேன் அவ்வள்வுதான்’ எனக்கூறினார்.