
வேலூர் அடுத்துள்ள அமிர்தி பகுதியில் ஒரு வன உயிரியல் பூங்கா உள்ளது. வேலூரிலிருந்து கல்லூரி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவிகள் தங்களின் ஆண் நண்பர்களுடன் இங்கே வருவது வழக்கம்.
இந்நிலையில், வேலூரில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவர் சமீபத்தில் தனது காதலனுடன் அங்கு வந்துள்ளார். அதன்பின், அங்கிருந்து 6 கி.மீ தூரமுள்ள அடர்ந்த காட்டுப்பகுதிக்கு காதலனுடன் சென்றுள்ளார். அப்போது அங்கு 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து அந்த மாணவியை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர்.
அவர்களிடமிருந்து தப்பிய அப்பெண் உடை கிழிந்த நிலையில் அங்கிருந்து ஓடியுள்ளார். அப்பெண்ணை அவர்கள் துரத்திக்கொண்டு ஓடினர். அப்போது, காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த 68 வயது முதியவர் ஒருவர் அப்பெண்ணின் கூக்குரல் கேட்டு அங்கு சென்றார். கையில் இருந்த அரிவாளை காட்டி அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது, அந்த வாலிபர்கள் முதியவரை தாக்க முயன்றனர்.
எனவே, அவர் விசிலடித்து சப்தம் எழுப்பினார். எனவே, அருகில் இருந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். எனவே, அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் ஒருவனை மட்டும் பொதுமக்கள் விரட்டிப் பிடித்தனர். அவனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படத்தனர். அந்த கல்லூரி மாணவியையும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அப்பெண்ணின் காதலனே தகவல் கொடுத்து அவரின் நண்பர்களை அங்கு வரசொல்லி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.