Connect with us

Cinema News

வெற்றிமாறன் இந்த நடிகைக்காக மட்டும் செய்த காரியம்.! அது ஒரு மாதிரியான கேரக்டர் ஆச்சே.,

தமிழ் சினிமாவை தனது தரமான திரைப்படங்கள் மூலம் உலக சினிமா வரிசையில் நிலைநிறுத்தி வரும் தமிழ் இயக்குனர்களில் தற்போது மிக முக்கியமானவர் இயக்குனர் வெற்றிமாறன்.

தனது திரைப்படத்தில் காட்சிகள் தான் நினைத்த படி வருவதற்கு மிகவும் மெனெக்கெடுவார். அது மாதக்கணக்கில் ஆனாலும் சரி அதற்காக காத்திருப்பார். அதே போல இந்த கதாபாத்திரம் இவர் தான் நடிக்க வேண்டும் என நினைத்துவிட்டால், அவர் தான் நடிக்க வேண்டும் என நிலைத்து நிற்பார்.

அப்படி தான் வடசென்னை ஆண்ட்ரியா கதாபாத்திரத்திற்கு அவரே மறுத்தால் கூட வெற்றிமாறன் நீங்கள் தான் செய்ய வேண்டும் என கூறி, நடிக வைத்தார்.

இதையும் படியுங்களேன் – ஷங்கர் பட வாய்ப்பை மிஸ் செய்த ராஜு பாய்.! அவர் கூட நடிச்சிருந்தா வேற லெவல் நீங்க..,

அது போல தான் ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் மனைவியாக நடித்த மீனல்  முதலில் மறுத்துள்ளார். வயதானவருக்கு இளம் மனைவி என்பது ஒரு மாதிரியாக இருக்கிறது என்று மறுத்துள்ளார். இருந்தாலும் வெற்றிமாறன் விடுவதாயில்லை.

தொடர்ந்து மீனல் மறுக்கவே, உடனே, வெற்றிமாறன், இதுவரை நான் யாரிடமும் கதை , காதாபாத்திரம் கூறியதில்லை உங்களிடம் கூறுகிறேன் என அந்த கதாபாத்திரத்தை பற்றி விவரித்தார் . பிறகு தான் நான் நடித்தேன் என மீனல்  தனது ஆடுகளம் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top