
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் விக்ரம் என்கிற புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் முதலில் வில்லனாக பஹத் பாசில் நடிக்கவிருப்பதாக முதலில் செய்திகள் வெளியானது. அதன்பின்னர் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்பட்டது. அதன்பின் இருவருமே இப்படத்தில் நடிப்பது தெரியவந்தது. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
இப்படத்தின் கதை ஏறக்குறைய முடிவுக்கு வந்துவிட்டது. எனவே, படப்பிடிப்பிற்கு தயாராக இருக்கிறார் லோகேஷ் கனகராஜ். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பி துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபுதேவா நடிக்கவிருந்தார். எனவே, இது தொடர்பாக பேச கமல்ஹாசனை தொடர்பு கொண்டால் அந்த பக்கம் எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம். பிரபுதேவா சல்மான்கானை வைத்து பாலிவுட்டில் இயக்கிய ‘ராதே’ திரைப்படம் தோல்வி அடைந்துவிட்டது. எனவே, கமல்ஹாசன் அவரை ஒதுக்க அதுதான் காரணமா என தெரியவில்லை.

காதலா காதலா திரைப்படத்திற்கு பின் மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தாராம் பிரபுதேவா. ஆனால், கமல் இப்படி நடந்து கொள்வதால் மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம் பிரபுதேவா. அவர் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில்தான் விஜய் சேதுபதி நடிப்பதாக கூறப்படுகிறது.





