Connect with us
tamil gossip

Gossips

நண்பனுக்கே துரோகம் செய்த இயக்குனர்…. அழுது புலம்பும் நண்பன் நடிகர்…!

பெரிதாக கதை இல்லாவிட்டாலும் மிகவும் ஜாலியாக படம் எடுத்து ஹிட் கொடுப்பவர் தான் அந்த இயக்குனர். சமீபத்தில் கூட விரல் நடிகரை வைத்து அந்த இயக்குனர் இயக்கிய படம் வேற லெவலில் ஹிட்டானது. இதனையடுத்து இயக்குனரின் மார்க்கெட்டுக்கும் எகிறி விட்டது.

இந்நிலையில் தான் இயக்குனருடன் இணைந்து புதிய படம் ஒன்றை பண்ணலாம் என அந்த நண்பர் நடிகர் முடிவு செய்து இயக்குனரிடம் அட்வான்ஸாக பணத்தையும் கொடுத்துள்ளார். ஆனால் அப்பாவை வைத்து படம் பண்ணலாம் என நண்பனுடன் போட்ட ஒப்பந்தத்தையே அந்த இயக்குனர் மறந்து விட்டாராம்.

மேலும் தற்போது மகன் நடிகரை வைத்து பான் இந்தியா படத்தை இயக்கி வரும் அந்த இயக்குனர் நண்பன் நடிகர் கொடுத்த பணத்தை முழுவதுமாக செலவு செய்து விட்டு பணம் வாங்கியதே மறந்து விட்டாராம். இதனால் நண்பன் நடிகர் கடும் மன உளைச்சலில் உள்ளாராம்.

சரி எப்படியாவது போன் பண்ணி பேசி, தனது நிலைமை சொல்லலாம் என நினைத்தால், அந்த இயக்குனர் நண்பனின் போனை கூட எடுப்பதில்லையாம். ஒரு படம் ஹிட் கொடுத்துட்டு வெற்றி போதையில் நண்பனையே மறந்து விட்டாரே என இயக்குனர் மீது அவரது நண்பர் செம கடுப்பில் உள்ளாராம்.

இதுதவிர மற்ற நண்பர்களை சந்தித்து இந்த பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்க்கவும் அந்த நண்பர் நடிகர் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Gossips

To Top