ஷாருக்கானிடம் பேசவே முடியல.. இதுல படத்தை எப்படி எடுக்குறது.. புலம்பும் அட்லீ…

Published on: June 2, 2021
---Advertisement---

cd6c0746bc81e890d7785723793d763d-1

ராஜா ராணி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் அட்லீ. பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரைப் போலவே கூறிய பட்ஜெட்டை விட அதிக பட்ஜெட்டில் படம் எடுத்து தயாரிப்பாளர்களை கதற விடுபவர். தயாரிப்பாளர் நஷ்டமடைந்து தலையில் துண்டை போட்டாலும் அதை பற்றி கவலைப்படாமல் அடுத்த படம் எடுக்க கிளம்பிவிடுவார். 

விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் என 3 படங்களை இயக்கியவர் தற்போது பாலிவுட்டில் ஷாருக்கனை வைத்து படம் இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். கடந்த பல மாதங்களாகவே மும்பையில் தங்கி ஷாருக்கானுக்கான கதையை உருவாக்கி வந்தார்.  பல கரெக்‌ஷனுக்கு பின்னார் கதை இப்போது ஓகே ஆகியுள்ளது. இப்படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனமே தயாரிக்கவுள்ளது.

043bafab1b6e448cf3732f2c3bdd83b2

இப்படத்தின் வேலைகளை மும்பையில் தங்கியிருந்து மும்முரமாக செய்து வருகிறார் அட்லீ. ஆனால், பாலிவுட் ஸ்டைல் வேறு மாதிரி இருக்கிறதாம். ஒவ்வொரு நாளும் 20க்கும் மேற்பட்டோர் அட்லியின் அலுவலகத்திற்கு வந்து அன்றைய செலவுகளின் கணக்குகளை கேட்டு தலைவலியை கொடுக்கிறார்களாம். ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்ல முடியாமல் ‘ஏன்டா இப்படத்தை இயக்க ஒப்புக்கொண்டோம்’ என தினமும் அட்லீ அனாசின் போட்டு வருகிறார் என செய்திகள் ஏற்கனவே வெளியானது.

57f37c0cb5956b7169aec9881402d240

அட இதை கூட பொறுத்துக்கொள்ளலாம். கதை தொடர்பாக ஷாருக்கானிடம் தொலைப்பேசியில் பேசக்கூட முடியவில்லையாம்.  எப்போதும் செல்போனில் அழைத்தாலும் ஷாருக்கானின்  உதவியாளர்தான் போனை எடுக்கிறாராம். எனவே, இதுவரை ஒருமுறை கூட ஷாருக்கானிடம் பேச வில்லையாம் அட்லீ. எனவே, பேசவே முடியல. படத்தை எப்படி எடுப்பது என அதிர்ந்து போய் அமர்ந்துள்ளாராம் அட்லீ.

இங்கே விஜயிடம் பேசுவது போல பாலிவுட்டில் கான்களிடம் பேச முடியாது என்பது இப்போதுதான் அட்லீக்கு தெரியவந்துள்ளது.
 

Leave a Comment