Connect with us

Cinema News

ரஜினியும் கமலும் மீட் பண்ணிக்கிட்டது ஏன்? – இருவரும் சேர்ந்து படம் பண்ண போவதாக தகவல்..!

திரைத்துறையில் வெளியில் போட்டி நடிகர்களாக பேசப்பட்டாலும், வெகுக்காலமாக நண்பர்களாக இருப்பவர்கள் நடிகர் ரஜினியும் கமலஹாசனும் ஆவர்.

சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்க நிர்வாகிகள் நடிகர் ரஜினிக்காந்தை சந்தித்திருந்தனர். அந்த சமயம் நடிகர் கமலும் ரஜினியை சந்தித்திருந்தார். விக்ரம் திரைப்படத்திற்காக வாழ்த்துக்களை வாங்க அவர் சென்றதாக கூறப்பட்டது.

ஆனால் உண்மை அது இல்லையாம், கமல் தயாரிப்பில் ரஜினி படம் நடிக்க வேண்டும் என்கிற பேச்சு வார்த்தை வெகுநாட்களாகவே இருவருக்குள்ளும் இருந்தது. ஆனால் சில காரணங்களால் ரஜினியால் கமல் படத்தில் நடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மீண்டும் படம் பற்றி பேசுவதற்காக கமல் ரஜினியை சந்துத்துள்ளார். இதனால் நெல்சன் இயக்கத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கலாம்.

இந்த படத்தையும் கூட லோகேஷ் கனகராஜ் இயக்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
Rajkumar
Continue Reading

More in Cinema News

To Top