திடீரெனு ஒரு ட்விட்டர போட்டு ஷாக் கொடுத்த அனிருத்…! அடுத்தடுத்த ஜாக்பாட்…! என்னய்யா நடக்குது பாலிவுட்ல…?

Published on: June 3, 2022
ani_main_cine
---Advertisement---

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கான வேலைகள் விறுவிறுப்பாக போய்க் கொண்டிருக்கின்றது. இந்த படத்தில் நடிகை நயன் தாரா நடிப்பதாக தகவல் ஏற்கெனவே வெளியாகி கொண்டிருக்கையில் படத்திற்கான பாதி வேலைகள் முடிந்து விட்டது. இந்த நிலையில் இன்று படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது.

ani1_cine

அந்த டீஸரில் நடிகர் ஷாரூக்கான் மட்டும் தோன்றுவது மாறியான காட்சிகள் மட்டுமே வெளியிட்டு ஒன் மேன் ஆர்மியாக ஷாரூக்கானை காட்டியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட 5 மொழிகளில் வெளியாகும் இந்த படத்தின் தலைப்பு ‘ஜவான்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஜவான் படம் அடுத்த வருடம் ஜுன் 2ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என சாரூக்கான் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ani2_cine

இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் அனிருத்தும் தன் ட்விட்டர் பக்கத்தில் கனவு நனவாகியுள்ளது. பாட்ஷாவுக்காக எனது பங்களிப்பை கொடுத்த அட்லீக்கு நன்றி எனவும், எங்களை ஆசிர்வதியுங்கள் எனவும் கேட்டுள்ளார். மேலும் இந்த பதிவை அட்லீ, ஷாருக்கான் போன்றவர்களை டேக் செய்து பதிவிட்டுள்ளார். இதை பார்க்கும் போது இந்த ஜவான் படத்திற்கும் அனிருத்து தான் இசையமைக்கிறாரா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

ani3_cine

மேலும் சிலர் சரியான் அப்டேட் எனவும் கூறி வருகின்றனர். போகிற நிலைமையை பார்த்தால் அனிருத் தவிர வேற யாரும் இல்லை என்ற நிலைமைக்கு சினிமா வந்து விடும் போல் இருக்கிறது எனவும் கூறிவருகின்றனர்.இதுவரைக்கும் சஸ்பென்சாக வைத்திருந்த விஷயத்தை அனியின் இந்த ட்விட்டர் எந்த அளவுக்கு தெளிவு படுத்தியுள்ளது என போக போக தான் தெரியும்.

Rohini

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.