மீண்டும் ரஜினியுடன் ஒரு படமா? – கார்த்திக் சுப்பாராஜ் சொல்வது என்ன?

Published on: June 5, 2021
---Advertisement---

f2308c71964793196562cd5ea076f26b

குறும்படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பாராஜ் பீசா திரைப்படம் மூலம் இயக்குனரானார். அதன்பின் ஜிகர்தண்டா, மெர்குரி, இறைவி உள்ளிட்ட படங்களை இயக்கினார். மேலும், ரஜினியின் தீவிர ரசிகரான இவர் அவரை வைத்து ‘பேட்ட’ திரைப்படத்தை இயக்கினார். நீண்ட வருடங்களுக்கு பின் ரஜினியை பழைய குறும்புடன் பார்த்ததில் அவரின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், மீண்டும் இந்த கூட்டணி இணையவுள்ளதாக செய்திகள் பரவியது. ரஜினியும் ‘அண்ணாத்த’ படத்திற்கு பின் யார் இயக்கத்தில் நடிப்பார் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. 

e366b3058fd79f460f28d504d55a2076

இதுபற்றி சமீபத்தில் பேட்டியளித்த கார்த்திக் சுப்பாராஜ் ‘நான் ரஜினியை மீண்டும் இயக்குவதாக வெளியான செய்திகளை நானும் படித்தேன். நானும் மீண்டும் ரஜினியுடன் இணையும் அந்த வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். அவர் இப்போதுதான் அண்ணாத்த முடித்துள்ளார். அடுத்து என்ன நடக்கும் என தெரியாது. நான் காத்திருக்கிறேன்’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment