ஒரு கோடி கொடுத்தா ஓகே.! வீம்பு பண்ணும் அண்ணாச்சி.! எல்லாம் அந்த வீடியோ தான் காரணமாம்.!

Published on: June 6, 2022
---Advertisement---

சரவணா ஸ்டோர் எனும் பிரமாண்ட கடைகள் மூலம் மக்கள் மத்தியில் அறியப்பட்டவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அருள். இவர் தன் கடை விளம்பரத்தில் தானே நடித்து அதன் பிறகு தற்போது தனது தயாரிப்பில் தானே ஹீரோவாக நடித்தும் உள்ளார்.

இந்த படத்தை ஜேடி & ஜெரி ஆகியோர் இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதே போல படத்தின் டிரைலரும் வரவேற்பை பெற்றது.

அதாவது,  படத்தின் ட்ரைலர் சூர்யா பட ட்ரைலர், தனுஷ் பட ட்ரைலர் ஏன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் அண்ணாத்த திரைப்பட ட்ரைலர் வரை அனைத்தையும் கடந்துவிட்டது. ரசிகர்கள் மத்தியில் இந்த ட்ரைலர் வீடியோ அந்தளவுக்கு பிரபலமாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் –  விக்ரம் தாறுமாறு ஹிட்.! ஆண்டவருக்கு தூது விடும் டான் தயாரிப்பாளர்.! அடுத்த பிரமாண்ட அப்டேட்..,

இதனை அறிந்த அண்ணாச்சி படத்தை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்த்துவிடலாம் என கணக்கு போட்டுள்ளாராம். அதன் படி, இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமத்தை கேட்க வந்த நிறுவனத்திற்கு, ‘ இந்த படத்தின் வெளிநாட்டு தியேட்டர் உரிமம் 1 கோடி ‘ என கூறி அதிரவைத்துவிட்டாராம்.

ஒரு இளம் வெற்றிப்பட ஹீரோ  படத்திற்கு என்ன விலை கேட்பார்களோ அதே விலையை அறிமுக ஹீரோ அண்ணாச்சி கேட்டதால் சற்று ஜெர்க் ஆகிவிட்டதாம் அந்த நிறுவனம்.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.