சூப்பர் ஓவருக்கு முன் ’இதை’ 5 நிமிடமாக தேடினேன் ! ரோஹித் ஷர்மா கலகல !

Published on: January 30, 2020
---Advertisement---

a8eda90151f94302ab8f3d5a78333cac-3

நியுசிலாந்து அணிக்கெதிரான நேற்றைய மூன்றாவது போட்டியில் சூப்பர் ஓவரில் வெற்றி பெற வைத்த நாயகன் ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.

நியுசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று டி 20 போட்டிகளையும் வென்ற இந்தியா தொடரை வென்றுள்ளது. நேற்று நடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற வைத்த தொடக்க ஆட்டக்காரர் சூப்பர் ஓவருக்கு முன்னதான மனநிலையைப் பற்றி பேசியுள்ளார்.

அதில் ‘நியுசிலாந்து ஆடிய விதத்தைப் பார்த்து நான் எளிதாக அவர்கள் போட்டியை வென்றுவிடுவார்கள் என்று எண்ணினேன். அதனால் எதிர்பாராத விதமாக சூப்பர் ஓவர் வந்துவிட்டது. அதன் பிறகு பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக எனது கிட் பேக்கை துழாவினேன். ஆனால் 5 நிமிடம் வரை எனது அப்டமன் கார்டு கிடைக்கவில்லை. பின்னர் ஒருவழியாக அதை  தேடி கண்டுபிடித்து களத்துக்கு வர தாமதமாகி விட்டது.’ எனக் கூறியுள்ளார்.

Leave a Comment