
தமிழகத்தில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று முதல் தளர்த்தப்பட்டுள்ளது. இறைச்சி, மீன், காய்கறி, மளிகை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், தச்சர்கள் போன்ற சுய தொழில் செய்வோர் இ – பாஸ் மூலம் விண்ணப்பித்து பணிகளை செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஆட்டோக்கள், கார்களில் பயணிப்பவர்கள் இ -பாஸ் பதிவு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இ பாஸ் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் கூடுதலாக வாடகை வாகன பயணத்திற்கு அனுமதி பெறுவதற்கான இணைப்பு சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், பைக், கார், ஆட்டோக்களுக்கு இ-பாஸ் பதிவு செய்ய புதிய லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதில் சென்று மற்ற மாவட்டங்களுக்கு செல்வதற்கான உரிய காரணத்தை கொடுத்து இ பாஸ் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை முதலே பலரும் இ-பாஸுக்கு விண்ணப்பித்தனர். ஒரே நேரத்தில் பலரும் இ -பதிவு செய்ய முயன்றதால் தமிழக அரசின் இ பாஸ் இணையதளம் முடங்கியது குறிப்பிடத்தக்கது.





