
Cinema News
நீங்க வந்தா தேவர் மகன்.! இல்லனா வேணாம்.! 30 வருடத்திற்கு முன் கமல் எடுத்த அதிரடி முடிவு.!
Published on
1992ஆம் ஆண்டு கமலின் எழுத்தில் உருவாகி பரதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தேவர்மகன். தற்போது வரை சிறந்த இந்திய திரைப்படங்களில் இந்த தேவர்மகன் திரைப்படமும் முக்கிய இடத்தில் உள்ளது. தற்போதும் இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் ஏராளம்.
இந்த திரைப்படம் பற்றிய பல்வேறு சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் உலாவரும். இந்த திரைப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன் 7 நாளில் முடித்து விட்டாராம். முதலில் வேறு ஒரு தலைப்பு வைத்து பின்னர் இளையராஜா இந்த படத்திற்கு தேவர் மகன் தலைப்பு சரியாக இருக்கும் என சிபார்சு செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.
அதேபோல் இந்த படத்தின் பெரிய தேவர் கதாபாத்திரத்தினை வடிவமைக்கும் போது இந்த கதாபாத்திரத்திற்கு சிவாஜிதான் சரியாக இருப்பார் என்று கமல் தீர்மானம் செய்து விட்டாராம்.
ஆனால், அந்த சமயம் சிவாஜி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படங்களில் நடிப்பதை சுத்தமாகத் தவிர்த்து வந்த நேரம். அதிலும் அவருக்கு அப்போது தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருந்து வந்தாராம்.
ஆதலால், அவரது மகன்களான ராம்குமார் மற்றும் பிரபு ஆகிய இருவருமே சிவாஜி நடிப்பதை விரும்பவில்லை. இருந்தாலும், கமல்ஹாசன் பிடிவாதமாக எவ்வளவு நாட்கள் ஆனாலும் சரி தேவர் மகன் திரைப்படம் சிவாஜி கணேசன் இல்லாமல் உருவாகாது என்று காத்திருந்தாராம்.
இதையும் படியுங்களேன் – வில்லன் வேஷத்துக்கு வேற ஆள் கிடைக்கலையா.?! சிவகார்த்திகேயனை நொந்து கொள்ளும் ரசிகர்கள்.!
அதன் பின்னர், உடலில் பேஸ்மேக்கர் எனும் கருவி பொருத்தப்பட்டு அந்த படத்தில் நடித்துக் கொடுத்தாராம் சிவாஜி கணேசன். தற்போது வரை அந்த கதாபாத்திரத்திற்கு அவரை விட பொருத்தமான நபர் யாரும் இருக்க மாட்டார்கள் என்பது தான் பலரது கருத்து. அதன் காரணமாகத்தான் கமல்ஹாசன் அவ்வளவு தீர்க்கமாக உறுதியாக சிவாஜிதான் நடிக்க வேண்டுமென்று இருந்துள்ளார் என்பது படம் பார்த்த அத்தனை பேருக்கும் தெரியும்.
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...