ஷாலினி வந்த போது விபரீதம்…கையை கடித்த புலி.. வண்டலூரில் பதட்டம்

Published on: January 30, 2020
---Advertisement---

e97f129bae02287fd669106ee398698e

நடிகை ஷாலினி இன்று தனது குழந்தைகளுடன் சென்னைக்கு அருகேயுள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்றார். அங்கு சிங்கம், புலி, கரடி,குரங்கு, மான், நீர் யானை  என பல்வேறு வகையான விலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், புலிகள் இருந்த இடத்திற்கு ஷாலினி சென்றுள்ளார். அப்போது ஷாலினியை பார்க்க அங்கு கூட்டம் கூடியது. இதில், மிரண்டு போன குட்டி புலி ஒன்று அருகிலிருந்த பராமரிப்பாளர் விஜயாவின் வலது கையில் கடித்து விட்டது.  இவர் 40 வருடங்களாக அங்கு பணிபுரிந்து வருகிறார். அவரை பூங்கா ஊழியர்கள் அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment