ஜூன் 3வது வாரம் பள்ளிகள் திறப்பு? – குழப்பம் தரும் அறிவிப்பு

Published on: June 9, 2021
---Advertisement---

77e773f7adacb659d4362d3bd012ccf1

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் மார்ச் மாதம் முதலே பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. ஆன்லைனில் மட்டும் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த வரும் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆல் பாஸ் என அறிவிபு வெளியானது. அதன்பின் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டது. 

மேலும், சமீபத்தில் 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியானது. அதில் ஜுன் 3ம் வாரத்தில் 11ம் வகுப்பில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான வகுப்புகளை துவக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 11ம் வகுப்பிற்கு நேரடியாக வகுப்புகளை துவங்க வேண்டும் எனகூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒருவேலை ஆன்லைனில் மட்டுமே எனில் அது தெளிவாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. எனவே, இது குறித்து பள்ளிக்கல்வித்துறை விளக்கமளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Comment