Connect with us

Gossips

வாஸ்து சரியில்ல.. லோகேஷ் போன இடத்துக்கு நானும் போறேன்.! நடையை கட்டிய நெல்சன்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான தர்பார், அண்ணா ஆகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத காரணத்தால் அடுத்த படத்தை எப்படியும் வெற்றி படமாக மாற்ற வேண்டுமென்று தீயாய் வேலை செய்து வருகிறார்.

இயக்குனர் நெல்சனுக்கும் கடைசி படமான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தராததால், அவரும் தற்போது தன்னை நிரூபித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

தற்போது தலைவர் 169 திரைப்படத்தின் திரைக்கதை பணியை மேம்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் நெல்சன். அதற்காக சென்னையில் உள்ள பிரபல சோமர்செட் ஹோட்டலுக்கு (somerset hotel)  சென்று கதை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம்.

இதையும் படியுங்களேன் – சிம்பு சாரின் அனுபவம் எனக்கு உதவியது.! விக்னேஷ் சிவன் ஓபன் டாக்.!

அந்த ஹோட்டலில்தான் கமல்ஹாசன் தனது கதைகளை மேம்படுத்தும் பணியில் ஈடுபடுவாராம். அதே ஹோட்டலில் தான் இதற்கு முன்னர் விக்ரம் படத்தின் கதை விவாதம் பணிகளில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு இருந்தாராம்.

தற்போது அதே இடத்திற்கு நெல்சனும்  சென்று இருப்பதால் கண்டிப்பாக கதைகளும் நன்றாக அமையும் என்று கூறப்படுகிறது. அந்த ஹோட்டலில் பாதுகாப்பு மிக கடுமையாக இருக்குமாம். வெளியாட்கள் யாரும் உள்ளே அவ்வளவு எளிதாக வந்து விட முடியாது. ஆதலால் பெரிய பெரிய நட்சத்திரங்கள், இயக்குனர்கள் அந்த ஹோட்டலை தங்களின் கதை விவாதத்திற்கு பயன்படுத்தி கொள்வார்களாம்.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top