விஜய் கையில் இருக்கும் அதே பேண்ட்.. சஞ்சய் விஜயை ‘குட்டி தளபதி’ என கொஞ்சும் ரசிகர்கள்…

Published on: June 10, 2021
---Advertisement---

e30dcabcfd71d400ca3e27ebfef655bf

தமிழ் சினிமாவில் படிப்படியாக வளர்ந்து தற்போது ரூ.100 கோடி சம்பளம் பெறும் நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் விஜய். இவரை இவரின் ரசிகர்கள் தளபதி என அழைத்து வருகின்றனர். விஜய் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அவரின் 65வது திரைப்படமாகும்.  

இப்படத்திற்கு பின் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது. 

6a670a7689b027402a353913359abb67

ஒருபக்கம் விஜயின் மகன் சஞ்சய் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் கூட தோழிகளுடன் அவர் காரில் செல்லும் வீடியோ வெளியாகி வைரலானது.

இந்நிலையில், கம்ப்யூட்டருக்கு முன் அவர் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும், விஜய் கையில் கட்டியிருந்த அதே பேண்ட், சஞ்சய் கையிலும் இருப்பதாக அவர்கள் பதிவிட்டு சஞ்சயை ‘குட்டி தளபதி’ என பதிவிட்டு வ்ருகின்றனர்.

6a453c7eed95783c3d432a8ab039dd37

Leave a Comment