ஹிந்திக்கு போகும் ‘மாஸ்டர்’ – விஜய் வேடத்தில் சல்மான்கான்?

Published on: June 10, 2021
---Advertisement---

2a2a2c9d77af6786163f91b05a5bc430

தமிழில் மெஹா ஹிட் அடித்த திரைப்படங்கள் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழியில் ரீமேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். அப்படி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து ஹிட் அடித்த மாஸ்டர் திரைப்படமும் ஹிந்திக்கு செல்கிறது.

இப்படத்தில் விஜய் வேடத்தில் நடிக்க சல்மான் கானிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதேபோல், விஜய் சேதுபதி வேடத்தில் பாலிவுட்டில் முக்கிய நடிகர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சல்மான்கான் இப்படத்தில் நடிக்க விரும்பினால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத்தெரிகிறது. 

சல்மான்கான் ஏற்கனவே விஜய் நடித்த போக்கிரி படத்தின் ரீமேக்கில் நடித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Comment