விக்னேஷ் சிவன் தங்கச்சிக்கு 30 சவரன் தங்கம்.!? 20 கோடி பங்களா.! வாரி வழங்கிய நயன்தாரா.!

Published on: June 10, 2022
---Advertisement---

நேற்று கோலிவுட் முழுக்க தலைப்புச் செய்தியாக பேசப்பட்டது என்றால் அது விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண நிகழ்ச்சி தான். தற்போது வரை இந்த செய்தி இன்னும் அடங்கவில்லை. நயன்தாரா அணிந்திருந்த  ஆடை, அணிகலன்கள் முதல் விக்னேஷ் சிவன் சொந்த ஊர் வரை அனைத்தும் இன்று பேசு பொருளாகி உள்ளது.

2015ஆம் ஆண்டு நானும் ரவுடிதான் எனும் திரைப்படம் ஷூட்டிங் சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் காதலித்து வந்தனர். அப்போது இருந்து கடந்த 7 வருடமாக காதல் பறவைகளாக சுற்றித்திரிந்தவர்கள், தற்போது திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டனர்.

தனது திருமணத்தை ஒட்டி விக்னேஷ் சிவன் நெருங்கிய வட்டாரத்திற்கு நயன்தாரா நிறைய பரிசுகளை வழங்கியுள்ளாராம். குறிப்பாக விக்னேஷ் சிவன் தங்கை ஐஸ்வர்யாவுக்கு சுமார் 30 சவரன் தங்க நகைகளை பரிசாக நயன்தாரா வழங்கியுள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – சொந்த ஊரில் யாரையும் அழைக்காத விக்னேஷ் சிவன்…நயன்தாரா கிடச்சா இப்படியா?….

இது போக சுமார் 20 கோடிக்கு ஒரு பெரிய வீட்டை விக்னேஷ் சிவன் பெயருக்கு எழுதி வைத்துள்ளாராம் நயன்தாரா. இந்த செய்தி அண்மையில் ஒரு பிரபல பத்திரிக்கை ஒன்றில் பகிரப்பட்டு இருந்தது.

இவ்வாறு 30 சவரன் நகை ஒரு பங்களா என ஒரு வரதட்சணை போல இது பார்க்கப்படுகிறது.  அல்லது நயன்தாரா தனது அன்பு மிகுதியால் இந்த பரிசுகளை விக்னேஷ் சிவனுக்கு வழங்கினாரா என்பது சரியாக தெரியவில்லை. ஏன், இன்னும் சொல்லப்போனால்  இவையெல்லாம் அதிகாரப்பூர்வமாக எதுவும் வெளியில் தெரியவில்லை . வெறும் தகவல்கள் மட்டும் கசிந்து வருகின்றன.

Manikandan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.