அதெல்லாம் பொய்.! ரோலக்ஸ் சூர்யா யார் தெரியுமா.?! உளறி கொட்டிய லோகேஷ் கனகராஜ்.!

Published on: June 10, 2022
---Advertisement---

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் , ஃ பகத் பாசில், விஜய் சேதுபதி என பலர் நடிப்பில் மிரட்டிய திரைப்படம் விக்ரம். அதனால் தான் படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸை மிரட்டி வருகிறது என்று கூட கூறலாம்.

ஆனால், தியேட்டரை விட்டு வருகையில் ரசிகர்கள் மனதில் அனைத்தையும் மறக்கடித்து நின்ற கதாபாத்திரம் என்றால் அது சூர்யா நடித்து இருந்த ரோலக்ஸ் கதாபாத்திரம் தான். வெறும் 3,4 நிமிட காட்சிகள் தான் ஆனால் மனுஷன் மிரட்டி இருந்தார்.

அதுஅடுத்த பாகத்துக்கான லீட் என குறிப்பிடப்பட்டதால் அடுத்த படத்திற்க்கு எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எழுந்துள்ளது. அதனால்,  பலரும் பவிதமாக கதை கூறி வருகின்றனர். சூர்யாவும் ஒரு போலீஸ் அதிகாரி தான் அடுத்த பாகத்தில் கமலும், சூர்யாவும் இணைந்து விடுவர் என கூறப்பட்டது.

இதையும் படியுங்களேன் – விக்னேஷ் சிவன் தங்கச்சிக்கு 30 சவரன் தங்கம்.!? 20 கோடி பங்களா.! வாரி வழங்கிய நயன்தாரா.!

ஆனால் இதெற்கெல்லாம் அண்மையில் நேர்காணல் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் இயக்குனர் லோகேஷ். சூர்யாவின் ரோலக்ஸ் பற்றி கேட்கப்பட்ட போது , அது முழுக்க முழுக்க கெட்டவனாக உருவாக்கப்பட்டது தான். ரோலக்ஸ் போலீஸ் எல்லாம் கிடையாது. தானாக உருவாகி ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்குகிறான் அவ்வளோதான்.  சூர்யா பக்கா வில்லன் கதாபாத்திரம் தான் என உண்மையை அப்படியே உளறிவிட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.