
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலகின் அனைத்து நாடுகளும் தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது. இந்தியாவும் கோவிஷீல்டு, கோவாக்சின் என 2 தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி வருகிறது.
ஆனால், தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. 65,45,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், தற்போது 2-18 வயது வரை தடுப்பூசி போடும் நிலை உருவாகியுள்ளது. ஒருபக்கம் பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் புகைப்படம் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். இது தொடர்பான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.





