தமிழகத்தில் குறையும் கொரோனா – இன்றைய அப்டேட் என்ன?..

Published on: June 11, 2021
---Advertisement---

55e2b34a66e02faa1c08d75496b5471c

தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்பு கொரோனால் பாதிக்கப்படுவோரின் தினசரி பாதிப்பு 35 ஆயிரமாக இருந்தது. ஆனால், தொடர் ஊரடங்கு காரணமாக படிப்படியாக குறைந்து தற்போது 15 ஆயிரத்தை தொட்டுள்ளது. கடந்த 14 மணி நேரத்தில் தமிழகத்தில் 15,759 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சுப்பிரமணியன் ‘ தமிழக அரசின் செயல்பாடு காரணமாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அரசு மருத்துவமனைகளில் 50 ஆயிரம் படுக்கைகள் காலியாக உள்ளது. அரசின் கட்டமைப்பு முழு பலத்துடன் இருக்கிறது. எனவே, கொரோனா 3வது அலை வந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்’ என அவர் கூறினார்.

Leave a Comment