
நடிகர் பார்;த்திபன் ஒரு பன்முகக் கலைஞன். நடிகர், குணச்சி;த்திர நடிகர், வில்லன், இயக்குனர், தயாரிப்பாளர், கவிஞர் என தனக்குள் பல திறமைகளைக் கொண்டவர். இவர் இயக்கிய கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சத்தைக் கொண்டது. ஹவுஸ்புல் படம் சினிமா தியேட்டரையே மையமாகக் கொண்டு கதையை பின்னியிருப்பார். படமும் ஹவுஸ்புல்லாக ஓடி வெற்றி பெற்றது. 15 படங்களை இயக்கியுள்ளார். 14 படங்களை தயாரித்துள்ளார். 60 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். இவர் கிறுக்கல்கள் என்னும் கவிதைத் தொகுப்பையும் எழுதியுள்ளார்.
இவர் கே.பாக்யராஜின் சீடர் இவர். அவர் இயக்கத்தில் 20 படங்களுக்கு மேல் துணை இயக்குனராக வேலை பார்த்துள்ளார். பார்த்திபன் இயக்கிய புதிய பாதை, ஹவுஸ்ஃபுல் போன்ற படங்கள் பிலிம்பேர் விருதுகளைப் பெற்றவை.
காமெடியாக கருத்துக்களை பதிவு செய்வதில் பார்த்திபன், மணிவண்ணன், விவேக் ஆகியோர் தமிழ்சினிமாவில் தனக்கென தனி முத்திரை பதித்தவர்கள். இவர் நடிப்பில் வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் பாரதிகண்ணம்மா, நீ வருவாய் என, வெற்றிக்கொடிகட்டு, அழகி, ஆயிரத்தில் ஒருவன், ஒத்த செருப்பு போன்ற படங்கள் முக்கியமானவை.
இவர் படைப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற சில படங்களைப் பார்ப்போம்.
புதிய பாதை
1989ல் பார்த்திபன் இயக்கி நடித்த முதல் படம் புதியபாதை. முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருப்பார். படத்தின் போக்கே வித்தியாசமாக இருக்கும். அழுத்தமான கதை. அதனுடன் நாமும் சேர்ந்து பயணிக்க ஆரம்பித்து விடுவோம். படம் முடிந்த பிறகு நம்மையும் அறியாமல் படத்தின் சில காட்சிகள் சில நிமிடங்கள் நம் மனக்கண் முன் ஊசலாடிக்கொண்டே இருக்கும். இந்த படத்தில் பார்த்திபனுக்கு ஜோடியாக அவர் மனைவி சீதா நடித்திருப்பார். நாசர், வி.கே.ராமசாமி, சத்யபிரியா, மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். கிட்டத்தட்ட 150 நாட்களை தாண்டி ஓடி வெற்றிவாகை சூடியது. 2 நேஷனல் பிலிம் அவார்டு இன்னும் சில விருதுகளை பெற்றது. இப்படத்தின் வெற்றியை வைத்து கன்னடம், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 38 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாக்கப்பட்டது. யாரப்பத்தியும், அப்பன் யாரு.., பச்சப்புள்ள …ஆகிய பாடல்கள் மெலடி ரகம்.
பாரதி கண்ணம்மா
1997ல் சேரன் இயக்கத்தில் வெளியான படம் பாரதி கண்ணம்மா. இதில், பார்த்திபன், மீனா, விஜயகுமார், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். பார்த்திபன் மற்றும் வடிவேலுவின் காமெடி இந்த படத்திற்கு மாபெரும் வெற்றியைத் தேடித் தந்தது. பிரபுசாலமன் இந்த படத்தை கன்னடத்தில் ரீமேக் செய்தார். அங்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. தென்றலுக்கு தெரியுமா என்ற மெலடி பாடல் உள்ளது. மேலும் ரயிலு ரயிலு புல்லட் ரயிலு என வடிவேலு பாடிய பாடலும் இப்படத்தில் தான் இடம்பெற்றது.
நீ வருவாய் என

1999ல் வெளியான சூப்பர்ஹிட் படம். ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், அஜித்குமார், தேவயானி போன்ற பிரபலங்கள் நடிப்பில் இப்படம் வந்தது. அஜித்குமார் இந்த படத்தில் இறந்துவிடுகிறார், அவரின் கண்ணை எடுத்து பார்த்திபனுக்கு வைத்து விடுவார்கள். அதனால் அஜித்குமாருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டிருந்த தேவயானி பார்த்திபனை மிக நெருக்கமாக இருந்து பார்த்துக் கொள்வார். இதனால் பார்த்திபனுக்கு ஒரு தலை காதல் ஏற்பட்டு கதை நகரும், இந்த படம் ரசிகர் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதால் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. எஸ்.ஏ.ராஜ்குமாரின் இன்னிசையில் ஒரு தேவதை வந்து விட்டாள்.., பார்த்து பார்த்து, அதிகாலையில் சேவலை எழுப்பி…ஆகிய பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்தவை.
வெற்றிக்கொடிகட்டு
2000த்தில் சேரன் இயக்கத்தில் வெளியான படம் வெற்றி கொடி கட்டு. முரளி, பார்த்திபன், மீனா, வடிவேலு, மனோரமா, மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வெளிநாட்டிற்கு செல்வதாக மொத்த சொத்தையும் விற்று, அதில் ஏமாந்து விடும் வாலிபரின் கதை. ஒரு கீழ்தட்டு மக்கள் எந்த அளவிற்கு ஏமாற்றப் படுகிறார்கள், என்பதை சமுதாயத்திற்கு எடுத்துக்காட்டிய படம்.
இந்தப் படத்தில் பார்த்திபன் வடிவேலு காமெடி அதிகமான வரவேற்பு பெற்றது. என்னது துபாய் போனீயா என வடிவேலு பார்த்திபனிடம் நக்கலாய் பேசி மாட்டிக்கொள்ளும் காட்சியைத் தொடர்ந்து குண்டக்க மண்டக்காக கேள்வி கேட்கும் பார்த்திபன் வந்தாலே அலறி ஓடும் வடிவேலு என இருவரது காம்பினேஷனும் படத்திற்கு பிளஸ் பாயிண்ட் ஆனது. முரளி அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து பணத்தை பறி கொடுத்து மனத்தை கனக்கச் செய்கிறார். சார்லி பணத்தை இழந்து பைத்தியக்காரன் போல் வாழ்ந்;திருப்பார். ரசிகர்களிடம் பாராட்டையும், நெகிழ்ச்சியையும் உருவாக்கிய படம். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை. கருப்பு தான் எனக்குப் புடிச்ச கலரு பாடல் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது.
அழகி

2002ல் தங்கர்பச்சான் இயக்கத்தில் பார்த்திபன், தேவயானி, விவேக் நடித்த படம்;; அழகி. இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட். பார்த்திபன், தேவயானி திருமணம் செய்து கொண்ட பின் பழைய காதலியாக நந்திதா தாஸ் இந்த படத்தில் நடித்திருப்பார். மாபெரும் வெற்றி பெற்ற படம். பாட்டு சொல்லி, பாட்டு சொல்லி…, உன் குத்தம்மா…,ஒளியிலே பிறந்தது தேவதையா பாடல்கள் நெஞ்சைத் தொட்டு தாலாட்டுபவை. படத்தில் இளம் அழகியாக நடித்த மோனிகாவின் நடிப்பு அருமை.
ஒத்த செருப்பு அளவு 7
2019ல் வெளியான இப்படம் முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. தனிநபராக படத்தில் வாழ்ந்து காட்டி பார்த்திபன் நடித்த இப்படம் சினிமாவில் ஒரு புதிய முயற்சி. பார்த்திபன் ஒருவர்தான் இந்தப் படத்தில் நடித்துள்ளார், மற்றவர்களின் குரல்கள் மட்டுமே கேட்கும் என்பது இந்தப் படத்தின் தனிச்சிறப்பு. தனி ஒரு மனிதனாக இரண்டு மணி நேரப் படத்தை சுவாரசியம் குன்றாமல் நகர்த்திச் செல்ல முடியும் என நிரூபித்திருக்கிறார்பார்த்திபன் நடித்து, தயாரித்து, கதை எழுதி இயக்கியுள்ளார். இந்தப்படம் இந்திய சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. 2019ல் சிங்கப்பூர் தெற்காசிய திரைப்படவிழாவில் திரையிடப்பட்டது. 2020ல் டொராண்டோ உலக தமிழ்திரைப்பட விழாவில் 3 விருதுகளைத் தட்டிச் சென்றது. தனி நடிப்பு, சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய விருதுகளைப் பெற்றது.





