பாகிஸ்தானில் நடந்தால் ஆசியக்கோப்பையில் இந்தியா பங்கேற்காது – பிசிசிஐ பிடிவாதம்!

Published on: January 30, 2020
---Advertisement---

58b2b32516994675fca0209b56621718

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி கலந்து கொள்ளாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆசிய அணிகளின் உலகக்கோப்பை என வர்ணிக்கப்படும் ஆசியக் கோப்பை தொடர் இரு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் தொடர் பாகிஸ்தானில் நடக்க உள்ளது. பாதுகாப்புக் காரணங்களால் பல அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்து வருகின்றன.

அதனால் பாகிஸ்தானில் ஆசியக் கோப்பை நடந்தால் இந்திய அணியை அனுப்ப முடியாது என பிசிசிஐ தெரிவித்துள்ளது. போன முறை இந்தியாவில் நடக்க இருந்த வேளையில் பாகிஸ்தான் வீரர்களின் விசா கிடைக்காத காரணத்தால் துபாய்க்கு மாற்றப்பட்டது. அதுபோல இந்த முறையும் மாற்றினால் இந்தியா கலந்துகொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆனால் இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒரு வேளை இந்தியா விளையாடாவிட்டால் பெரிய அளவில் வருமானம் இருக்காது என்பதால் என்ன முடிவு எடுக்கப்படும் என ஆவலைக் கிளப்பியுள்ளது.

Leave a Comment