ரெஜினாவின் அதிரடி ஆக்சன் படத்தில் விஷ்ணு விஷால்! சிறப்பு தோற்றமா?

Published on: January 30, 2020
---Advertisement---

2212fb456229f5046bc2a9801789a618

நடிகை ரெஜினா நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த திரைப்படத்தை கார்த்திக் ராஜூ என்ற இயக்குனர் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது குற்றாலம் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த படத்திற்காக சண்டை பயிற்சிகளை மேற்கொண்டிருந்த ரெஜினா டூப் இன்றி சண்டை காட்சிகளில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது விஷ்ணுவிஷால் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் ரெஜினாவுக்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில் இது குறித்து படக்குழுவினர் எந்த தகவலையும் சொல்ல மறுத்து விட்டனர்

இருப்பினும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்திற்குள் முடிந்துவிடும் என்பதால் இந்த படத்தின் ஒருசில காட்சிகளில் மட்டும் விஷ்ணு விஷால் தோன்றுவார் என்றும் ஆனாலும் கதைக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர் என்ற திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Comment