தமிழ் சினிமாவில் இரட்டை படங்கள் அன்று முதல் இன்று வரை…

Published on: June 14, 2021
---Advertisement---

f07b057002e562f7799d0f27cce61aaa

ஒரே பெயரில் வெளியான 2 படங்கள் தமிழ்சினிமாவில் நிறைய வந்துள்ளன. அன்றும் இன்றும் வெளியாகியுள்ள இப்படங்களை ஆராய்ந்து பார்த்தால் எப்போதுமே பழைய படங்கள் தான் ஹிட் என்று தெரிய வரும். மேலும், இந்தப்படங்களில் சில படங்கள் மட்டும் 3 தடவை வந்துள்ளது. அதில், 1940ல் வெளியானது. குறிப்பிடத்தக்கவை உத்தமபுத்திரன். இந்தப்படம் நம் தாத்தாவுக்கெல்லாம் தாத்தா காலத்து படம். இப்படத்தில் பி.யு.சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

இந்த படம் 3 தடவை இதே பெயரில் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடிகர்கள் நடிப்பில் வெளியானது. அதே போல் பில்லா படம். இது ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சூப்பர்    ஹிட் படம். 1980ல் வெளியானது. அதன் பின் அஜீத்குமார் நடிப்பில் இந்த படம் 2 தடவை வெளியானது குறிப்பிடத்தக்கது. இவற்றில் எம்.ஜி.ஆர்.,ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களே பெரும்பாலும் 2தடவைகள் அதேபெயரில் வெளியாகியுள்ளன. இவற்றைப் பற்றி பார்க்கலாம். 

ரஜினிகாந்த் படங்கள் 

இரட்டைப்படங்களில் ரஜினிகாந்த் நடித்த படங்களே அதிகளவில் வெளியாகியுள்ளதால் அப்படங்களைப் பற்றி சற்று விவரமாக பார்க்கலாம்.

ஜானி 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்திருந்தனர். படத்தின் இசையை இளையராஜா அமைத்திருந்தார். பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ஆனது. காற்றில் எந்தன் கீதம், ஆசையைக் காத்துல தூது விட்டேன்.., என் வானிலே.., ஒரு இனிய மனது ஆகிய பாடல்கள் நெஞ்சை விட்டு நீங்காதவை. அதன் பின்னர் ஜானி என்ற பெயரில் 2018ல் பிரசாந்த், சஞ்சிதா ஷெட்டி, பிரபு ஆகியோர் நடித்த படம் வெளியானது.

ராஜாதி ராஜா 1989ல் ரஜினிகாந்த், ராதா, நதியா ஆகியோர் நடித்த படம். 2009 ராகவா லாரன்ஸ், மீனாட்சி, மும்தாஜ் ஆகியோர் நடித்த படம்.  
தர்மதுரை 1991ல் ரஜினிகாந்த், மது, கௌதமி ஆகியோர் நடித்தனர். 2016 விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்த படம்.  பொல்லாதவன். 2007ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம். தனுஷ், திவ்யா ஸ்பந்தனா, டேனியல் பாலாஜி நடித்த படம். படிக்காதவன் 1985ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம். 2009ல் தனுஷ், தமன்னா நடித்த படம் படிக்காதவன். வேலைக்காரன் 1987ல் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். 

2017ல் சிவகார்த்திகேயன், பகத் பாசில், சினேகா நடிப்பில் வெளியான படம் வேலைக்காரன். தங்கமகன் 1983ல் ரஜினிகாந்த், பூர்ணிமா ஜெயராம் நடிப்பில் வெளியான படம். 2015ல் தனுஷ், சமந்தா நடிப்பில் வெளியான படம். மனிதன் 1987ல் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லிகணேஷ், செந்தில் உள்பட பலர் நடித்திருந்தனர். 2016ல் வெளியான இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், ராதாரவி, சந்தானம், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், விவேக் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

குரு சிஷ்யன் 1988ல் ரஜினிகாந்த், பிரபு, கவுதமி, சீதா ஆகியோரது நடிப்பில் வெளியான படம். 2010ல் சத்யராஜ், சுந்தர்.சி. ஆகியோரது நடிப்பில் வெளியான படம் குரு சிஷ்யன் தான். பில்லா 1980ல் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, பாலாஜி, மேஜர் சுந்தர்ராஜன் மற்றும் பலர் நடித்திருந்தனர். 2007ல் வெளியான இப்படத்தில் அஜீத்குமார், நயன்தாரா, பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். பின்னர் 2012ல் அதே படம் பில்லா 2 என்ற பெயரில் வெளியானது. இதில் அஜீத்குமார், பார்வதி ஓமனகுட்டன், பிரபு மற்றும் பலர் நடித்திருந்தனர். 

எம்.ஜி.ஆர் படங்கள்

8c7c64fe1785e28378e6511d356e7f11

ரஜினிகாந்த்துக்கு அடுத்தப்படியாக எம்ஜிஆர் படங்களின் பெயர்களில் பிற நடிகர்கள் நடித்து அதிக படங்கள் வெளியாகியுள்ளன. அவை நம்நாடு, ஆயிரத்தில் ஒருவன், வேட்டைக்காரன், சதிலீலாவதி, புதுமைப்பித்தன் ஆகிய படங்கள்.

வேட்டைக்காரன் 1964ல் எம்.ஜி.ஆர், சாவித்ரி நடித்த படம், 2009ல் விஜய், அனுஷ்கா நடித்த படம். புதுமைப்பித்தன் 1957ல் வெளியான இப்படத்தில் எம்ஜிஆர், பாலையா, சந்திரபாபு, பி.எஸ்.சரோஜா, டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர். 1998ல் வெளியான இப்படத்தில் பார்;த்திபன், தேவயானி மற்றும் பலர் நடித்திருந்தனர். 

சதிலீலாவதி 1936ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான படம். 1995ல் கமல், கோவை சரளா நடிப்பில் வெளியான படம் சதிலீலாவதி. ஆயிரத்தில் ஒருவன் 1965ல் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரது நடிப்பில் வெளியான புரட்சிகரமான படம். 2010ல் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, சிவக்குமார், ரீமாசென் ஆகியோர் நடிப்பில் வெளியான படம். தற்போது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தையும் எடுத்து வருகிறார்கள். 

நம்நாடு 1969ல் புரட்சித்தலைவர் எம்ஜிஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் இணைந்து நடித்த படம். வாங்கய்யா…வாத்தியாரைய்யா…, நினைத்ததை நடத்தியே முடிப்பவன், நல்லபேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என முத்து முத்தான பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 2007ல் வெளியான நம்நாடு படத்தில் சரத்குமார், கார்த்திகா, சிம்ரன் ஆகியோரது நடிப்பில் வெளியான படமும் நம்நாடு தான். நாடோடி மன்னன் 1958ல் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் திரைப்படம். 1995ல் சரத்குமார், மீனா நடிப்பில் வெளியான படம்.

கமல் படங்கள் 

46eb70ba81d598d231e96d16ca7e3837
காக்கிசட்டை1985ல் கமல், அம்பிகா நடித்த படம். 2015ல் சிவகார்;த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த படம். 

குரு 1989ல் ஐ.வி.சசியின் இயக்கத்தில் வெளியான படம் குரு. இப்படத்தில் கமல், ஸ்ரீதேவி, மோகன்பாபு, பண்டரிபாய் ஆகியோரது நடிப்பில் வெளியான படம் குரு. 2007ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான இந்தி ரீமேக் படம் குரு. மிதுன் சக்கரவர்த்தி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், வித்யாபாலன், மாதவன் நடிப்பில் உருவான படம்.  

மங்கம்மா சபதம் 1943ல்; ரஞ்சன், வசுந்தரா தேவி, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பில் உருவான படம் மங்கம்மா சபதம். 1985ல் கமல்ஹாசன், மாதவி, சத்யராஜ் ஆகியோரது நடிப்பில் உருவான படம் மங்கம்மா சபதம் தான்.    

அபூர்வசகோதரர்கள் 1949ல் வெளியான இப்படத்தில் எம்.கே.ராதா, பானுமதி, நாகேந்திரராவ், சோமு மற்றும் பலர் நடித்த இப்படத்தை ஜெமினி ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் அப்போதே சூப்பர்    ஹிட் டபுள் ஆக்டிங் படம். 1989ல் கமல்ஹாசன், கவுதமி, நாகேஷ், ஸ்ரீவித்யா, ஜனகராஜ் ஆகியோரது நடிப்பில் வெளியான மெகாஹிட் திரைப்படம். 

தசாவதாரம் 2008ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், அசின் நடிப்பில் வெளியான படம் தசாவதாரம். 1976ல் வெளியான பக்தி காவியம். இதில் ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா மற்றும் பலர் நடித்து இருந்தனர். இதில் கமல் 10 வேடங்களில் வந்து கலக்கி சாதனை படைத்து இருப்பார். 

பிறபடங்கள்

உத்தமபுத்திரன் 1940ல் பி.யு. சின்னப்பா இரட்டை வேடத்தில் நடித்த படம். 1958ல் சிவாஜி, பத்மினி நடித்த படம். 2010ல் விஜய் ஆண்டனி, ஜெனிலியா, தனுஷ், பாக்யராஜ், விவேக் ஆகியோர் நடித்த படம்.  

சர்வர் சுந்தரம் 1964ல் நாகேஷ், முத்துராமன் நடிப்பில் வெளியான நகைச்சுவைப் படம். 2020ல் ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடிக்க உள்ள படம் சர்வர் சுந்தரம். 

அழியாத கோலங்கள் 1979ல் வெளியான 2019ல் வெளியான தமிழ்படம். அழியாத கோலங்கள் 2 என்ற பெயரில்  2019ல் பிரகாஷ்ராஜ், ரேவதி, அர்ச்சனா, நாசர் ஆகியோரின் நடிப்பில் வெளியானது.

அம்பிகாபதி படம் 1957ல் வெளியானது. இப்படத்தில் சிவாஜிகணேசன், பானுமதி நடித்திருந்தனர். பின்னர் அதே பெயரில் 2013ல் தனுஷ், சோனம்கபூர் நடிப்பில் வெளியான படம். இந்தப்படம் ராஞ்சனா என்ற இந்தி படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. 

மீரா 1945ல் எம்.எஸ்.சுப்புலெட்சுமி நடித்த படம் மீரா. இந்த படத்தில் சித்தூர் வி.நாகையா, டி.எஸ்.பாலையா, குமாரி கமலா ஆகியோர் உடன் நடித்துள்ளனர். 1992ல் விக்ரம், ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான படம் மீரா. 

5bf7b47f3e044369e41adffff9f52745

சங்கமம் 1970ல் வெளியான ஜெமினிகணேசன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த படம். 1999ல் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் ரகுமான், சந்தியா, மணிவண்ணன் உள்பட பலர் நடித்த படம். 

நெஞ்சிருக்கும் வரை 1967ல் வெளியானது. சிவாஜிகணேசன், முத்துராமன், கே.ஆர்.விஜயா ஆகியோர் நடித்த படம். 2006ல் வந்த நரேன், பூனம் கவுர் ஆகியோர் நடிப்பில் வெளியான படம். 

காவியத்தலைவன் 1992ல் விஜயகாந்த், பானுப்பிரியா நடிப்பில் வெளியான படம். 2014ல் வெளியானது. இந்தப்படத்தில் பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர். 

சத்ரியன் 1990ல் விஜயகாந்த், பானுப்பிரியா, திலகன், ரேவதி ஆகியோர் நடித்த படம் சத்ரியன். 2017ல் விக்ரம் பிரபு, மஞ்சிமா மோகன் உள்பட பலர் நடித்த படத்தின் பெயரும் சத்ரியன் தான். 
 

Leave a Comment