
நடிகர் ரஜினி ஏற்கனவே 2 முறை சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். முதலில் சிங்கப்பூர் மருத்துவமனையில் ஒரு அறுவை சிகிச்சையும், அமெரிக்காவில் ஒரு அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அவரும் குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்று வருகிறார்.
தற்போது மீண்டும் அவர் அமெரிக்கா செல்லவுள்ளார். கொரோனா காலம் என்பதால் தனி விமானத்தில் செல்லவிருக்குமவர் மத்திய அரசிடம் இதற்கான அனுமதியை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் அவரின் மனைவி, மகள்கள் செல்வார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது.





