
யுடியூப் சேனலில் பப்ஜி போன்ற கேம்களை உருவாக்கி சிறுவர், சிறுமியர்களை கவர்ந்தவர் மதன். டாக்ஸிக் மதன் 18+ என்கிற யுடியூப் சேனகில் சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்களிடம் மிகவும் ஆபாசமாக பேசி வந்துள்ளார். எனவே, இவர் மீது தமிழகத்தின் பல மாவட்டங்களில் புகார் கொடுக்கப்பட்டது. எனவே, சென்னையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சைபை கிரைம் போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால், மதன் ஆஜராகவில்லை. மேலும், தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தன்னுடைய இருப்பிடத்தை அவர் மாற்றி மாற்றிக்காட்டி போலீசாரை குழப்பி வருகிறார். அவரின் இரு யுடியூப் சேனலையும் முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மதன் தலைமறைவாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. எனவே, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.





