
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் விஜய் சேதுபதி. முதலில் சின்ன சின்ன வேடங்களில் தலை காட்டி பின் தற்போது பல கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலிலும் நடித்து வருகிறார். மேலும், அனைத்து மொழி இயக்குனர்களும் விஜய் சேதுபதியை தங்களின் திரைப்படத்தில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஒருபக்கம் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரங்களிலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் வெற்றிக்கே அவரின் கதாபாத்திரமு, நடிப்பும் மிக முக்கியமான ஒன்றாக இருந்தது.
இந்நிலையில், கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பிரசாந்த் நீல் தற்போது கேஜிஎப் 2 படத்தை இயக்கி முடித்து விட்டு பிரபாஸை வைத்து சலார் என்கிற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்கு பின் அவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.





