
Cinema News
சிவகார்த்திகேயனுக்கு அல்வா கொடுத்த நயன்தாரா.! மேடையில் வெளிப்பட்ட சீக்ரெட் இதோ…
Published on
தமிழ் சினிமாவில் முதலில் ஒரு படத்திற்கு ஒரு ஹீரோ பேசப்படுவார். சில நேரம் ஒப்பந்தம் கூட நடந்து விடும். ஆனால், கடைசி நேரத்தில் ஏதோ சில காரணங்களால் வேறு ஹீரோ மாற்றப்பட்டு, அந்த படம் வெளியாகிவிடும். இந்த சம்பவம் பல முன்னணி நாயகர்களுக்கே நடந்துள்ளது.
அப்படி ஒரு சம்பவம் தான் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் அட்லிக்கு இடையில் நடந்து உள்ளது. இவர்கள் இருவரும் சினிமாவில் வருவதற்கு முன்னர் இருந்தே நண்பர்கள். அட்லி இயக்கிய முதல் குறும்படத்தில் நடித்த ஹீரோ சிவகார்த்திகேயன் தான்.
அதன் பிறகு அட்லி முதல் திரைப்படம் இயக்க செல்லும் போது, சிவகார்த்திகேயனை தான் ஹீரோவாக நடிக்க வைப்பேன் என கூறி இருந்தாராம். அதாவது ராஜா ராணி கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெய் கதாபாத்திரம் முதலில் சிவகார்த்திகேயனுக்கு பேசப்பட்டதாம்.
ஆனால், ஏனோ சில காரணங்களால் அந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க முடியாமல் போனது. ஜெய் நடித்து அந்த கதாபாத்திரம் பேசப்பட்டது.
இதையும் படியுங்களேன் – இனி இந்தியன் 2 என்னோட கண்ட்ரோல்.! ஆனால்..? ஆண்டவர் படத்துக்கு செக் வைத்த உதயநிதி.!
இதுகுறித்து, ஒரு விருது மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், ‘என்னை ஹீரோவாக ஆக்குகிறேன். நயன்தாராவுடன் ஜோடியாக்குகிறேன் என்று கூறினான். ஆனால், கடைசியில் அல்வா கொடுத்துவிட்டான். இந்த மச்சான் நயன்தாரா மேடம் கொடுத்து விட்டார்கள். என்று கூறி அல்வா தான் கடைசியில் கொடுத்தான்.’ என்று தனது நண்பன் அட்லீயை அருகில் வைத்துக்கொண்டே சிவகார்த்திகேயன் கலகலப்பாகப் பேசினார்.
ராஜா ராணி படத்தில் ஜெய் நடித்திருந்த கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்து இருந்தால், அது வேறு மாதிரியாக இருந்திருக்கும். உண்மையில் அந்த வெள்ளந்தியான கதாபாத்திரத்திற்கு ஜெய் மிக பொருத்தமாக இருந்தார் என்பது சினிமா விமர்சனங்களின் கருத்தாக உள்ளது.
ரங்கராஜ் முகத்திரை கிழிப்பு : மாதம்பட்டி ரங்கராஜ் சினிமா ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசல்டா என்பவரை ஆசை வார்தத்தை கூறி ஏமாற்றி...
தீயாய் வேலை செய்யும் விஜய் : விஜய் பேச்சில் ஏற்பட்ட தடுமாற்றம் : விஜயின் பேச்சு பல விமர்சனங்களை சந்தித்தாலும் இன்று...
சினிமா நடிகர் பிரபல காமெடி நடிகர் தாடி பாலாஜி மருத்துவமனையில் உயிருக்கு போராடும் நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிக்கையாளர் சேகுவேரா கூறி...
Vijay TVK: திருச்சியில் தனது பிரச்சாரத்தை ஆரம்பித்த விஜய் இன்று நாமக்கல் , கரூர் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த...
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் பாரதிராஜா. தன்னுடைய படங்களில் புதுமை புகுத்தி அதுவரை வந்து கொண்டிருந்த படங்களிலிருந்து...