190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகும் ஜகமே தந்திரம்..

Published on: June 15, 2021
---Advertisement---

03a16dbfd8b450d39d1381dd22f0d7f8

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். கடந்த வருடமே இப்படம் முடிவடைந்து விட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருப்பதால் படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்படத்தின் 90 சதவீதமான காட்சிகள் லண்டனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் இடம் பெற்ற புஜ்ஜி, ரகிட ரகிட ரகிட, நேத்து உள்ளிட்ட பாடல்கள் ஏற்கனவே யுடியூப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 

இந்த திரைப்படம் வருகிற 18ம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ளது. அதோடு, ஓடிடியில் வெளியாகி 2 மாதம் கழித்து இந்த திரைப்படம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவுள்ளது.   

இந்நிலையில், நெட்பிளிக்ஸில் இந்த திரைப்படம் மொத்தம் 190 நாடுகளில் 17 மொழிகளில் இப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது. இந்த தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

a6d0f126fc52ac18cf18e0e3ca94a211-2-2

Leave a Comment