மீண்டும் பாலிவுட்டில் தனுஷ்… யாருடன் நடிக்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படங்கள்…

Published on: January 30, 2020
---Advertisement---

9f490c3af869144a9027bec94e34d11a

நடிகர் தனுஷ் ஏற்கனவே பாலிவுட்டில் ரஞ்சனா, சமிதாப் ஆகிய 2 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் பாலிவுட் ஹீரோ அக்‌ஷய் குமாருடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

இப்படத்தை ஆனந்த எல். ராய் இயக்குகிறார். இப்படத்திற்கு ‘அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சாரா அலிகானும் நடிக்கவுள்ளார்.

3f2662b8ed99a1a3810429f6159c2bd2-2

இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து இயக்குனர் விளக்கிய 10 நிமிடத்தில் நான் நடிக்க சம்மதித்தேன். அது ஒரு சவாலான வேடம். என்னால் மறுக்க முடியவில்லை. என் வாழ்நாள் முழுவதும் இந்த கதாபாத்திரத்தை மறக்க மாட்டேன்’ என அக்‌ஷய்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Comment