
2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தொரட்டி’ திரைப்படத்தில் நடித்தவர் ஷமன் மித்ரு. இவர் மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் கே.வி. ஆனந்திடம் உதவியாளராக பணிபுரிந்தவர். மேலும், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார்.
தொரட்டி திரைப்படத்தை இவரே தயாரித்து நடித்தார். இந்த திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றது. இவரும், இவரின் மனைவியும் சில நாட்களுக்கு முன்பு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அவரின் மனைவி சிகிச்சையில் குணமடைந்தார். ஆனால், ஷமன் மித்ரு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை மரணமடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே நடிகர்கள் பாண்டு, கில்லி மாறன், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் உள்ளிட்ட பலரும் கொரோனாவால் பலியானது குறிப்பிடத்தக்கது.





