தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்… வெறியான விஜய் ரசிகர்கள்..

Published on: June 17, 2021
---Advertisement---

84750d0b71e7f7e343c8d6c931ad25e4

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ்  நிறுவனம் தயாரிக்க, கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தின் சில காட்சிகள் ஜார்ஜியாவில் படம்பிடிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக அடுத்த கட்டபடப்பிடிப்பு ஆகஸ்டில் துவங்கவுள்ளது.

இந்நிலையில், விஜயின் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Thalapathy65FirstLook என்கிற ஹேஷ்டேக்குடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களாகவே பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர்.

 

Leave a Comment