களைகட்டும் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்.. தெறிக்கும் காமன் டிபி….

Published on: June 18, 2021
---Advertisement---

1a1845be3e61e15ab79443b127e0d52a-4

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ‘மாஸ்டர்’ படத்தில் நடித்த பின், விஜய் தனது நெல்சன் இயக்கத்தில் ஒரு புதிய நடித்து வருகிறார். இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு  ஜார்ஜியாவில் நடந்தது. தற்போது, கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்டு மாதம் துவங்கவுள்ளது.

a8dc0766e96ba6ad804a6879b05eb56a

வருகிற 22ம் தேதி விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். எனவே, அன்று தளபதி 65 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, நேற்று முதலே விஜய் ரசிகர்கள் டிவிட்டரில் #Thalapathy65FirstLook என்கிற ஹேஷ்டேக்குடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களாகவே பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அதோடு, இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாத நிலையில், டார்கெட் என்கிற தலைப்பை விஜய் ரசிகர்களே சூட்டிவிட்டனர். அதற்கான போஸ்டர்களையும் அவர்களே உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

066c04f9d5ceeda7b0eda65818752779-4

இந்நிலையில், விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு டிவிட்டருக்காக காமன் டிபி உருவாக்கி அதை பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் பலரும் அந்த டிபிஐ தங்களின் டிவிட்டர் பக்கத்தின் புரஃபைல் படமாக வைத்துக்கொள்ள துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

4edf40d6556ac0159bb19c42a798d38c

 

Leave a Comment