Connect with us

latest news

மரியாதையா பேசலான கிழிச்சிருவேன்.! கோபத்தில் பொங்கிய ‘அட்ஜஸ்ட்மென்ட்’ சீரியல் நடிகை…

பல்வேறு தனியார் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஜீவிதா. அதைவிட அதிகமாக தனது வெளிப்படையான கருத்துக்கள் மூலம் அண்மையில் நெட்டிசன்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார் நடிகை ஜீவிதா.

அதுவும் இவர் தனக்கு சினிமாத்துறையில் ( சின்னத்திரையோ, பெரிய திரையோ தெரியவில்லை ) நடந்த பாலியல் சீண்டல்கள் பற்றி வெளிப்படையாக தைரியமாக அதனை அப்படியே சொன்னார்.

என்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொன்னார்கள். நான் என்ன என்று தெளிவாக கேட்டேன். உடனே முதலில் நான் வருவேன், அடுத்து இயக்குனர், அடுத்து ஒளிப்பதிவாளர், அடுத்து தயாரிப்பாளர், ஹீரோ என ஒவ்வொருவராக வருவார்கள். என்று வெளிப்படையாக தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் பற்றி கூறினார். அதன்மூலம் நெட்டிசன்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டவர் ஜீவிதா.

இதையும் படியுங்களேன் – சாய் பல்லவி மீது போலீசார் வழக்கு பதிவு.!? திடுக்கிட்டு போன ரசிகர்கள்…

இவர் அண்மையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசினார். அப்போது ,’என் மீது தவறு இருந்தால் நான் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்க தயார். அதுவே என்னிடம் தவறு இல்லாத போது, யாரேனும் என்னை சீண்டினாள் நான் சும்மா இருக்க மாட்டேன். அவர்கள் முகத்தை கிழித்து விட்டு தான் வெளியே வருவேன்.’ என்று மிகவும் கோபமாக அந்த நேர்காணலில் பேசியிருந்தார் ஜீவிதா.

அதனை பார்த்து நெட்டிசன்கள் ஜீவிதாவிற்கு இவ்வளவு கோபம் வருமா? என்று ஆச்சரியத்தில் உள்ளனர்.

author avatar
Manikandan
Continue Reading

More in latest news

To Top