
உலகளவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ள ஸ்மார்ட்போன்கள் பட்டியலில் ஐபோன் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
உலகில் மனிதர்களை விட அதிகமாக செல்போன்கள் இருக்கும் நாள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாத பொருளாக போன்கள் மாறியுள்ளன. இந்நிலையில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மொபைல் போன்களின் பட்டியலை கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ளது.
2019ம் ஆண்டின் 4ஆவது காலாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கையை வைத்து இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. அந்த பட்டியலில் ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை 7 கோடியே 29 லட்சம் போன்களை ஏற்றுமதி செய்து முதல் இடத்தில் உள்ளது. அதற்கடுத்த இடங்களில் சாம்சங் நிறுவனமும் அதற்கடுத்த இடத்தில் ஹவாய் நிறுவனமும் உள்ளன.
இதற்கு முன்னதாக இரு ஆண்டுகளுக்கு முன்னதாக ஆப்பிள் நிறுவனம் முதல் இடம் பிடித்து இருந்தது என்பது குறிப்பிடத்தகக்து.