என் தலைவன் படம் எங்கடா?!..ஜெயிலர் போஸ்டரை வச்சு செய்யும் நெட்டிசன்கள்….

Published on: June 17, 2022
jailer
---Advertisement---

கடந்த சில வருடங்களாக நடிகர் ரஜினியின் திரைப்படங்கள் பெரிதாக ரசிகர்களை கவர்வதில்லை. லிங்காவில் ஆரம்பித்து அண்ணாத்த வரை அவரின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படமும் ரசிகர்களின் கிண்டலுக்கு உள்ளானது. எனவே, எப்படியாவது அடுத்து ஒரு மெகா ஹிட் வெற்றிப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என ரஜினி விரும்புகிறார்.

annaatthe movie
annaatthe movie

ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இது ரஜினியின் 169வது திரைப்படமாகும். ஆனால், பீஸ்ட் படத்தில் சொதப்பி சமூகவலைத்தளங்களில் ட்ரோலுக்கு உள்ளான இயக்குனர் நெல்சன் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதால் அப்படம் வெற்றிப்படமாக அமையுமா என ரஜினி ரசிகர்களே சந்தேகத்தோடு உள்ளனர். இடையில் இயக்குனர் மாற்றப்படுவதாக கூட செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர் ‘ஜெயிலர்’ என்கிற தலைப்புடன் இன்று வெளியானது. அந்த போஸ்டரில் ஒரு பெரிய கத்தியில் ரத்தக்கறை படிந்திருப்பது போல் டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. அதோடு, இந்த போஸ்டர் ட்ரோலுக்கும் உள்ளாகியுள்ளது.

jailer

ரஜினி முகமே போஸ்டர்ல இல்ல..கசாப்பு கடை கத்தி தொங்குது…ரஜினி பேரை விட சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் பெயர்தான் முதலில் வருகிறது..இது எதாச்சும் குறியீடா.. என் தலைவன என்ன பண்ணப் போறீங்க?!… என ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

jailer

ஒருவர் ‘தலேவர் ஜெயிலரா இருந்துக்கிட்டே பார்ட் டைமா கறிக்கடைல வேல பாக்குறாராம்’ என பதிவிட்டுள்ளார். மற்றொருவர் இப்படம் ‘தர்பார் 2’-வாக இருக்கும் என கிண்டலடித்துள்ளார். இப்படி பலரும் பலவிதமாக ஜெயிலர் போஸ்டரை கிண்டலடித்து ட்ரோல் செய்து வருகின்றனர்.