
ராமநாதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளில் காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி விற்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹோட்டல்களில் குறைந்த விலையில் பிரியாணி வழங்கப்படுவதாக சில அறிவிப்புகள் வெளியாகும். அப்போதெல்லாம் எப்படி இவர்களால் எப்படி இவ்வளவு கம்மியான தொகைக்கு பிரியாணி வழங்க முடிகிறது என்ற சந்தேகம் எழும்.
இந்நிலையில் அதற்கு விடையளிக்கும் விதமாக ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள சில கடைகளில் காடை பிரியாணி என்ற பெயரில் காக்கா பிரியாணி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக காக்கைகளை மொத்தமாக மது கலந்த உணவுப் பொருட்களை போட்டு மயக்கி பிடிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதையறிந்த வனத்துறையினர் இதுபோல காக்கைகளைப் பிடித்த இருவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அசைவ உணவுப் பிரியர்கள் பீதியடைந்துள்ளனர்.