பல கோடி சம்பளம்!… அண்ணன் செல்வராகவனை கிடப்பில் போட்ட தனுஷ்…..

Published on: June 21, 2021
---Advertisement---

d7b5373fee76e75c14c904aeeb63a87c

நடிகர் தனுஷ் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்கும் நடிகர் ஆவார். தற்போது அவரின் கையில் 5க்கும் மேற்பட்ட படங்கள் இருக்கிறது. அவரின் நடிப்பில் உருவான அசுரன், கர்ணன் ஆகிய திரைப்படங்களில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அசுரன் படத்திற்காக சிறந்த நடிகர் விருதையும் அவர் பெற்றார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் அவர் நடித்து நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள ‘ஜகமே தந்திரம்’ திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

03a16dbfd8b450d39d1381dd22f0d7f8

தனுஷை பொறுத்தவரை அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்த புதுப்பேட்டை, காதல் கொண்டேன் ஆகிய 2 படங்களின் ரசிகர்களின் ஃபேவரைட்டாக இருக்கிறது. அடுத்து இருவரும் இணைந்து ஆயிரத்தில் ஒருவன் 2  திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாக செய்திகள் வெளியானது. இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால், அது ஆயிரத்தில் ஒருவன் 2 இல்லை எனவும் கூறினர். எனவே, இருவரின் கூட்டணியை ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அப்படம் இன்னும் அதிகாரப்பூர்வமாக துவங்கப்படவில்லை. 

202c3d8665b6e01d418dc354a23e6a4c

தனுஷ் அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்துக்கொண்டே செல்கிறார். தற்போது செல்வராகவனே தனுஷுக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ் தற்போது ‘The Grey Man’ என்கிற ஆங்கில படத்தில் நடித்து வருகிறார். அப்படம் முடிந்த பின் தனுஷ் -செல்வராகவன் கூட்டணி இணையும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு பட இயக்குனர் சேகர் கம்முலா இயக்கவுள்ளார். இப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி என 3 மொழிகளில் உருவாகவுள்ளது.

15ad8aae296f6b83de8b08de633e3a3c

இந்நிலையில், செல்வராகவன் படத்தில் நடிக்காமல் தெலுங்கு படத்தில் ஏன் தனுஷ் நடிக்க  ஒப்புக்கொண்டார் என்கிற காரணம் தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தில் நடிக்க தனுஷுக்கு ரூ.30 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதனால்தான் அண்ணன் படத்தை கிடப்பில் போட்டுவிட்டார் என செய்திகள் கசிந்துள்ளது. 

தனுஷ் ரூ.15 கோடி சம்பளம் பெற்று வருகிறார். அதை 2 மடங்காக கொடுத்ததால் அண்ணன் படத்தை விட்டு விட்டு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் எனத் தெரிகிறது.

கோடிகளுக்கு முன்  அண்ணனாவது தம்பியாது?.. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதுதானே பழமொழி….

Leave a Comment